வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாய்களை விரட்டி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாய்களை விரட்டி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 14 Jun 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. அதில் ஆற்காடு சாலை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், வேலப்பாடி, அன்புநகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகளவில் காணப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. அதில் ஆற்காடு சாலை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், வேலப்பாடி, அன்புநகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகளவில் காணப்பட்டது. தெருநாய்களை பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர்.

அதன்படி மாநகராட்சி கமி‌ஷனர் குமார் உத்தரவின்பேரில், நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், அதன் அருகில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும் சுற்றித்திரிந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டி விரட்டி பிடித்தனர். அதில் 5 நாய்களை வலைகள் மூலமாக பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.

பிடிபட்ட தெருநாய்களை முத்துமண்டபத்தில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். இன விருத்தி செய்யாமல் இருக்க, தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும், என்றனர்.


Next Story