கலெக்டர் அலுவலக வளாக கோவிலில் மீண்டும் கொள்ளை
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் மீண்டும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் சூலக்கரையில் கலெக்டர் அலுவலகமும் போலீஸ் நிலையமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கருப்பசாமி கோவிலும் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட வருவார்கள். அவர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை கடந்த 3 மாதத்துக்கு முன்பு மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடிச்சென்று விட்டனர். இந்த நிலையில் மீண்டும் கொள்ளை நடந்துள்ளது.
கருப்பசாமிகோவிலின் பூசாரியான மாரிக்கனி இரவில் கோவில் வளாகத்திலேயே படுத்து தூங்குவது வழக்கமாகும். அதேபோல நேற்று முன்தினம் பூஜையை முடித்து விட்டு கோவில் வளாகத்தில் தூங்கினார்.
உண்டியல்
நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்தனர். சத்தம் கேட்டு மாரிக்கனி விழித்த மாரிக்கனி 2 பேரையும் பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதாக அவர்போலீசில் புகார் செய்துள்ளார்.
சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.