பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில் பாதையில் பராமரிப்பு பணி


பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில் பாதையில் பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 15 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-16T02:03:53+05:30)

பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல 3 மின்இழுவை ரெயில்கள், ரோப்கார் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

பழனி,

இதன்மூலம் பக்தர்கள் எளிதில் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் 2–வது மின்இழுவை ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி தண்டவாளங்களில் உள்ள சிலிப்பர் கட்டைகள் அகற்றப்பட்டு புதிதாக கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேல்தளத்தில் உள்ள எந்திரப்பகுதிகள் பிரித்து மராமத்து பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 45 நாட்கள் நடைபெற உள்ளது.

இதேபோல் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதற்காக எந்திர பகுதி மற்றும் ரோப்கார் பெட்டிகள், மேல்தளத்தில் உள்ள ரோப்கள், உயர் கோபுரங்கள் ஆகியவற்றில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் ரோப்கார் இயக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story