மதுபானக்கடை இன்று மூடப்படுமா? அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்


மதுபானக்கடை இன்று மூடப்படுமா? அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:30 AM IST (Updated: 16 Jun 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடை இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படுமா? என்று தெரியாத நிலையில் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

குளித்தலை,

குளித்தலை நகரப்பகுதியில் ரெயில் நிலையம் அருகே செயல்பட்டுவந்த அரசு மதுபானக்கடையை தவிர மற்ற இடங்களில் செயல்பட்டுவந்த 5 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக தினந்தோறும் ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மதுபாட்டில்கள் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதில் சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளின் திண்ணைகளிலும், வீட்டு வாசலிலும் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மதுபாட்டில்களை வீட்டின் முன்பு உடைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அங்குள்ள பாரில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் மதுப்பிரியர்கள் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு தகராறு செய்துகொள்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

போராட்டம்

எனவே அங்குள்ள மதுபானக்கடையை அகற்றவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கடந்த மே மாதம் 7–ந் தேதி மற்றும் 9–ந் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் அருள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மது அருந்தும் பார் நிரந்தரமாக மூடப்படும். ஒரு மாத காலத்திற்குள் ரெயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படுமென உறுதியளித்தார்.

ஆனால் அதிகாரிகள் கூறியபடி அந்த மதுபானக்கடை அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் அந்த மதுபானக்கடையை அகற்றக்கோரி கடந்த 1–ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் ஜூன் மாதம் 16–ந் தேதி (இன்று) இந்த கடை இங்கிருந்து அகற்றப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தனர்.

நன்றி தெரிவித்து...

இந்த நிலையில் இந்த மதுபானக்கடை அகற்றப்படும் முன்பே குளித்தலை நகராட்சி 16, 19, 21 வார்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று குளித்தலை ரெயில் நிலைய சாலையில் இயங்கி வந்த மதுபானக்

கடையை நிரந்தரமாக மூடி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தந்த கரூர் டாஸ்மாக் உதவி மேலாளர், குளித்தலை கோட்டாட்சியர், வட்டாட்சியர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நன்றி என்று 16, 19, 21 வார்டு பொதுமக்கள் குளித்தலை நகரப்

பகுதியில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்குறிய ரெயில் நிலையம் அருகே உள்ள மது

பானக்கடை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரிகள் கூறியபடி அகற்றப்படுமா? என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.


Next Story