ஆள் கடத்தல் வழக்கில் சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. வீட்டில் பணிப்பெண்களாக ஜான்சிராணி, பானுமதி ஆகிய சகோதரிகள் வேலை செய்தனர். வேலையை விட்டு விலகிய பின்னர், சசிகலா புஷ்பா எம்.பி. மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் அந்த சகோதரிகள் பாலியல் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே பானுமதி திசையன்விளை போலீசில் மற்றொரு புகார் செய்தார். அதில், தன்னை சசிகலா புஷ்பா தரப்பினர் கடத்தியதாக கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரதிலகன், தாயார் கவுரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்களை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மனுதாரர்கள் 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி, நீதிபதி ஜே.நிஷாபானு நேற்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story