வனத்துறை அதிகாரிகளிடம் வழிப்பறி செய்த வழக்கில் 6 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
காரைக்குடி வனத்துறை அதிகாரிகளை மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில் 6 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
தேவகோட்டை,
காரைக்குடி வனச்சரக வனவர் செல்வேந்திரன், வன காவலர் அரவிந்தன் ஆகியோர் கடந்த 25-9-2012 அன்று காரைக்குடி செக்காலை முந்திரி காட்டில் மான் வேட்டை தடுப்பது தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வள்ளுவர் நகர் அருகே அவர்கள் வந்தபோது, பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் துரைபாண்டி(வயது 28), பாரதிநகர் அய்யனார்(46), பர்மா காலனி புகழ்(46), பாரிநகர் பாண்டி(46), செல்லபாண்டி(36), பர்மாகாலனி சேகர்(33) ஆகிய 6 பேரும் சேர்ந்து வழிமறித்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளை மிரட்டி ரூ.1,000 வழிப்பறி செய்ததுடன், இப்பகுதியில் ரோந்து செல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இதுகுறித்து வனவர் செல்வேந்திரன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் மீதும் காரைக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது செல்லப்பாண்டியின் மனைவி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சிவகங்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, தேவகோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
3 ஆண்டு சிறை
இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் துரைபாண்டி உள்பட 6 பேருக்கும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் துரைபாண்டி, அய்யனார், புகழ் ஆகியோருக்கு தலா ரூ.3,500-ம், பாண்டி, செல்லபாண்டி, சேகர் ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.3,000-ம் அபராதமும் விதித்தார்.
இதில் துரைபாண்டி மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 5 பேரும் திருச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story