நாகர்கோவிலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

வடசேரி கனகமூலம் சந்தையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள கடைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு வியாபாரம் செய்ய கடைகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ்கட்சி குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பகுஜன் சமாஜ் கட்சி குமரி மாவட்ட தலைவர் டேனியல் ஈஸ்டர்தாஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் முகம்மது ஹைதர் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நெல்லை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

Next Story