ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2017 1:30 AM IST (Updated: 16 Jun 2017 9:01 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அடையாள அட்டை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதற்கான பணிகள், மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் நடந்து வருகிறது. இதனால் இந்த மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களிடம் இருந்து கூடுதல் விவரங்களான ஓய்வூதியர்களின் புகைப்படம், ரத்தப்பிரிவு, ஆதார் எண், தொலைபேசி எண், வகித்த பதவி போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

விண்ணப்பம்

இதுவரை இந்த விவரங்களை தெரிவிக்காத ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெரும் மாவட்ட அல்லது சார் கருவூல அலுவலகங்களை தொடர்பு கொண்டு, அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

நேர்காணல்

மேலும் நடப்பாண்டிற்கான நேர்காணலில் இதுவரை பங்கேற்காத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருகிற 30–ந்தேதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெரும் மாவட்ட அல்லது சார் கருவூல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, நேர்காணலை பதிவு செய்திட வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வு சான்று பெற்று, அதனை கருவூல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story