கொட்டாம்பட்டி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி
கொட்டாம்பட்டி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி போக்குவரத்து பாதிப்பு
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதனால் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லாரிகள் மோதல்பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் ரவி (வயது 43). இவர் லாரி டிரைவராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் பாலகிருஷ்ணன் (35) இவரும் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு செங்கோட்டையில் இருந்து ஐதராபாத்துக்கு மரங்கள் ஏற்றிய லாரி சென்றது. அந்த லாரியை ரவி ஓட்டிச் சென்றார். அதில் மாற்று டிரைவராக பாலகிருஷ்ணன் சென்றார்.
இதேபோல அரியலூரில் இருந்து கேரளாவுக்கு சிமெண்டு மூடைகள் ஏற்றிய லாரி வந்தது. அந்த லாரியை பாடலூரை சேர்ந்த ராமஜெயம் மகன் ரமேஷ் (35) என்பவர் ஓட்டி வந்தார். மேலூர்–திருச்சி இடையே கருங்காலக்குடி நான்கு வழிச் சாலையில் நள்ளிரவில் வந்த போது எதிர்பாராத நிலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி, ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் பாய்ந்து, ரவி ஓட்டி வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலிஇந்த விபத்தில் 2 லாரிகளின் முன்பகுதிகளும் அப்பளம் போல நொறுங்கி முற்றிலும் சிதைந்தன. இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் ரவி, பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி தலைமையிலான போலீசார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து ஊழியர்கள், கொட்டாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விபத்துக்குள்ளான லாரிகளை, 2 மணி நேரம் போராடி மீட்டனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த டிரைவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிமெண்டு மூடைகள் ஏற்றி வந்த லாரி டிரைவர் படுகாயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லாரிகள் மோதிய விபத்தால் மதுரை–திருச்சி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு2 லாரிகளும் கனரக வாகனங்கள் என்பதால் சாலையில் இருந்து விரைவில் அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் அனைத்து வாகனங்களும், சர்வீஸ் சாலையில் சென்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்துக்குள்ளான லாரிகள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நேற்று காலை வரை நீடித்தது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.