கோர்ட்டு பணியை புறக்கணித்து விட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


கோர்ட்டு பணியை புறக்கணித்து விட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:25 AM IST (Updated: 17 Jun 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு பணியை புறக்கணித்து விட்டு திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

திருச்சி,

நீதிமன்ற கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு இருப்பதை கண்டித்தும் ஜூன் 16–ந்தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின் படி திருச்சியில் வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

கோர்ட்டு வளாகம் முன் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள் பின்னர் திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் துணை தலைவர் கமால்தீன், செயலாளர் ஜெயசீலன், இணை செயலாளர் சதீஷ்குமார் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் நீதிமன்ற கட்டண குறைப்புக்கும், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் நீதிமன்றங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த அதிகாரத்தை மீண்டும் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.



Next Story