பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:05 PM GMT (Updated: 16 Jun 2017 10:05 PM GMT)

தமிழ்நாடு நீதிமன்ற கட்டணங்கள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை கண்டித்தும், பிறப்பு- இறப்பு பதிவு சட்டத்தில்

பெரம்பலூர்,

 நீதிமன்றங்களின் அதிகாரத்தை நீக்கி விட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கியதை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூரில் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, செயலாளர் சுந்தர்ராஜன், வாசுதேவன், கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணமூர்த்தி, எழிலரசன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டத்தினால் பெரம்பலூர் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கோர்ட்டுகளிலும் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story