அரசுத்துறை நிறுவனங்கள், மாநகராட்சிக்கு ரூ.1,601 கோடி தண்ணீர் கட்டணம் பாக்கி
மும்பை மாநகராட்சிக்கு, அரசுத்துறை நிறுவனங்கள் ரூ.1,601 கோடி அளவில் தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்து உள்ளன.
மும்பை,
மும்பை மாநகராட்சிக்கு, அரசுத்துறை நிறுவனங்கள் ரூ.1,601 கோடி அளவில் தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்து உள்ளன.
தண்ணீர் கட்டணம் பாக்கிமும்பை மாநகராட்சி சார்பில் வணிக பயன்பாட்டிற்கும், குடியிருப்புகள், தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது. அரசுத்துறை நிறுவனங்கள் உள்பட பலரும் மாநகராட்சிக்கு தண்ணீர் கட்டணம் முறையாக செலுத்துவதில்லை.
இதில், அரசுத்துறை நிறுவனங்கள் மட்டும் 1,601 கோடியே 15 லட்சம் வரை தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
நோட்டீஸ்இவற்றில் அதிகபட்சமாக மேற்கு ரெயில்வே ரூ.194 கோடியே 9 லட்சமும், மத்திய ரெயில்வே 144 கோடியே 48 லட்சமும், மாநில வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (மகாடா) ரூ.140 கோடியே 71 லட்சமும் பாக்கி வைத்து உள்ளன.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தண்ணீர் கட்டணத்தை செலுத்த கோரி அரசுத்துறை நிறுவனங்களுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். ஆனால் அவற்றை அவர்கள் பொருட்டாக எடுத்து கொள்வதில்லை’ என்றார்.