நெடுவாசல் பொதுமக்கள் நூதன போராட்டம்


நெடுவாசல் பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-25T01:07:22+05:30)

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முதல் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர்.

வடகாடு,

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முதல் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 74–வது நாளாக நேற்றும் நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் தமிழக மக்கள் மடிந்து கிடப்பதுபோல பதாகை மாட்டிக்கொண்டு தரையில் சிலர் படுத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இந்த போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்வது தொடர்பாக இன்று (ஞ£யிற்றுக்கிழமை), சுற்று வட்டாரத்தில் உள்ள 70 கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன், போராட்ட குழுவினர் ஆலோசனை நடத்தும் கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெறுகிறது.


Next Story