சத்துணவு மையங்களுக்கு அரசு மானியம் குறைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


சத்துணவு மையங்களுக்கு அரசு மானியம் குறைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-25T01:41:24+05:30)

சத்துணவு மையங்களுக்கு அரசு மானியம் குறைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் தேசிங்கு, பொருளாளர் மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை குறைத்து வழங்குவதை கண்டித்தும், கியாஸ் அடுப்பு, மிக்சி ஆகியவற்றை சீர் செய்து தரக்கோரியும், சத்துணவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும் அடுத்த மாதம் (ஜூலை) 12–ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராமநாதன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, ரங்கசாமி, சாவித்திரி, மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜெயந்தி, ஆறுமுகம், ரஷீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story