காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; 3 ஆயிரம் பேர் பங்கேற்பு


காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 25 Jun 2017 5:47 PM GMT)

காயல்பட்டினத்தில் நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இதை முன்னிட்டு, கடற்கரையில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜிம்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோரத்துவ இணையம் சார்பில் காயல்பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ரம்ஜான் சிறப்பு தொழுகை, நேற்று காலை 7.40 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் தொடங்கியது. இதனை ஜிம்ஆ பள்ளிவாசல் இமாம் நைனா முகம்மது நடத்தினார். தொடர்ந்து குத்பா பேருரையினை பள்ளிவாசல் கத்தீபு அப்துல் மகித் மஹழரி நிகழ்த்தினார்.

இதில் ஜிம்ஆ பள்ளி வாசல்  தலைவர் அபுல்ஹசன் கலாமி, செயலர் நிவாஸ் அகமது, துணை தலைவர் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

3 ஆயிரம் பேர்

இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.  தொழுகைக்கு பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்து கொண்டனர்.


Related Tags :
Next Story