தூத்துக்குடி தொகுதி பொதுமக்களிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. குறைகள் கேட்டார்


தூத்துக்குடி தொகுதி பொதுமக்களிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. குறைகள் கேட்டார்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:45 PM GMT (Updated: 25 Jun 2017 5:47 PM GMT)

தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று தொகுதி பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகேட்பு கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

கோரிக்கைகள் மீது நடவடிக்கை


அப்போது, ‘மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் போது, கடைசி பகுதிவரை சீராக குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனை விரைந்து அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி, அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

யார்–யார்?


கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story