சகன் புஜ்பால் மனுவுக்கு அமாலாக்கத்துறையினர் எதிர்ப்பு


சகன் புஜ்பால் மனுவுக்கு அமாலாக்கத்துறையினர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 July 2017 2:42 AM IST (Updated: 1 July 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

மஹாராஷ்ட்ரா சதன் ஊழல் மற்றும் கலினா நில ஒதுக்கீடு வழங்கு ஆகியவற்றில் யவோலா தொகுதி எம்.எல்.ஏ. சகன் புஜ்பால் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மஹாராஷ்ட்ரா சதன் ஊழல் மற்றும் கலினா நில ஒதுக்கீடு வழங்கு ஆகியவற்றில் முன்னாள் மந்திரியும், யவோலா தொகுதி எம்.எல்.ஏ.வுமான சகன் புஜ்பால், கடந்த ஆண்டு அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் அவர் ஜூலை 17–ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிக்க தனக்கு அனுமதி வழங்கவேண்டும் என பண மோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு அனுமதி வழங்க அமலாக்கப்பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிறப்பு கோர்ட்டு இதுபோன்ற அனுமதி அளிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறி இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்து விட்டது.


Next Story