தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2017 3:00 AM IST (Updated: 1 July 2017 8:08 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. மாநகராட்சி பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் ரூ.1 கோடியே 37 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணியையும், புதிய பஸ் நிலையம், பிரையண்ட்நகர் பகுதியில் நடைபெற்று வரும் சுகாதார பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மடத்தூர் மற்றும் கணேஷ்நகரில் தலா ரூ.62 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், என்ஜினீயர் ரூபன் சுரேஷ் பொன்னையா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story