நகைச்சுவை நடிகரை தாக்கி வழிப்பறி: தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் கைது


நகைச்சுவை நடிகரை தாக்கி வழிப்பறி: தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 July 2017 4:00 AM IST (Updated: 2 July 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி(வயது 40). இவர் திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடந்த படப்படிப்பில் பங்கேற்று விட்டு, அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.

சூரமங்கலம்,

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி(வயது 40). இவர் திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடந்த படப்படிப்பில் பங்கேற்று விட்டு, அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்னைக்கு புறப்பட்டார். 26–ந்தேதி அதிகாலை 2 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்த அவர், அங்கிருந்து தனியார் சொகுசு பஸ் மூலம் சென்னை செல்ல ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ டிரைவருடன் அவரது 2 நண்பர்களும் ஆட்டோவில் இருந்தனர். ஆட்டோ நரசோதிப்பட்டி அருகே அவர்கள் சென்றதும் நடிகர் கொட்டாச்சியை தாக்கி, அவரிடம் இருந்து ரூ.2,500 ரொக்கம், செல்போன், 2 பவுன்நகை மற்றும் ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டினை பறித்து கொண்டு மூவரும் தப்பினர். இது குறித்து சூரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சேலம் சின்ன அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்த தீனதயாளன்(21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நடிகர் கொட்டாச்சியின் செல்போனை போலீசார் மீட்டனர். மேலும் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் சாதிக், அவரது நண்பர் பாரதி ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று ஜாகீர் அம்மாபாளையம் அண்ணாநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாதிக்பாஷாவை(30) போலீசார் கைது செய்தனர். பாரதியை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story