காதலியிடம் உல்லாசமாக இருந்தவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் பெண் கைது
அரக்கோணம் அருகே உள்ள கீழாந்துரை கிராமத்தை சேர்ந்தவர் நித்தியகுமார் (வயது 32). இவரும் அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே உள்ள கீழாந்துரை கிராமத்தை சேர்ந்தவர் நித்தியகுமார் (வயது 32). இவரும் அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நித்தியகுமார், காதலியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண், நித்தியகுமாரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு நித்தியகுமார், திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி மிரட்டி உள்ளார். இதற்கு நித்தியகுமாரின் தாய் அஞ்சலி (63), தந்தை தயாளன் (66) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.
இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் உமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கைது செய்தனர். மேலும் நித்தியகுமார், தயாளன் ஆகியோரை தேடி வருகின்றனர்.