விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்


விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் அனை த்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீடாமங்கலம்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய குழுவின் 25-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம், மாவட்ட துணைச்செயலாளர் ரெத்தினம், ஒன்றிய செயலாளர் நாகூரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேசினார்.

மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

2016-2017-ம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் முறைகேடு இல்லாமல் வழங்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் நடவு எந்திரம் மூலம் நடவு நட்டால் ரூ. 4 ஆயிரம் வழங்குவதை போல், கை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கைலாசம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் அண்ணாதுரை, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story