டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு உதவி கலெக்டரிடம் கிராமமக்கள் மனு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு உதவி கலெக்டரிடம் கிராமமக்கள் மனு
x
தினத்தந்தி 4 July 2017 3:00 AM IST (Updated: 3 July 2017 8:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் தாலுகா சவுடேகுப்பம் கிராமமக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா சவுடேகுப்பம் கிராமமக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் 600 குடும்பங்கள் உள்ளன. இங்கு அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. எனவே, இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

Next Story