டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் போராட்டம் மாணவர்களும் கலந்துகொண்டனர்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் போராட்டம் மாணவர்களும் கலந்துகொண்டனர்
x
தினத்தந்தி 4 July 2017 4:00 AM IST (Updated: 4 July 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே டாஸ்மாக்கடையை மூடக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே செட்டிசத்திரம் சோணாப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு எடமேலையூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக்கடையை மூடக்கோரி நேற்று செட்டிசத்திரம் சோணாப்பேட்டையில் கிராம மக்கள், அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நீடாமங்கலம் தாசில்தார் குணசீலி, இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, டாஸ்மாக் அலுவலக கண்காணிப்பாளர் முருகதாஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 7-ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


Next Story