சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய 4 பேர் கைது; 3 டிராக்டர்கள் பறிமுதல்

சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் கடத்தல்நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் குளத்தில் அடிக்கடி மணல் அள்ளுவதாக சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் அள்ளி கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், வடக்குபுது£ரை சேர்ந்த மாரிராஜா மகன் வரதராஜன் (வயது 19), சங்கரன்கோவில் கணபதிநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் அண்ணாமலை(19) என்பதும், வீரிருப்பு பகுதியில் மணல் அள்ள அனுமதி வாங்கி விட்டு, இருமன்குளம் பகுதியில் மணல் அள்ளியது தெரியவந்தது.
கைதுபின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராடர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய வடக்குபுது£ரை சேர்ந்த குருசாமி மகன் பரமசிவத்தை (35) தேடி வருகின்றனர்.
இதேபோல் கண்டிகைப்பேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் டிராக்டரில் வந்த இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, டிராக்டரை சோதனை செய்தபோது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வடக்குப்புது£ர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகன் மாரிராஜ்(33), வாடிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் (43) ஆகிய இருவரையும் கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.