டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2017 3:30 AM IST (Updated: 5 July 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அவினாசி

அவினாசியை அடுத்த பூளக்காட்டு பாளையத்தில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், பூளக்காட்டு பாளையம், கருணைபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்கள் பெரிய தொல்லைக்கு ஆளாக நேரிடும். மேலும் டாஸ்மாக் கடை திறக்க உள்ள இடத்துக்கு அருகில் தனியார் மருத்துவ கல்லூரியும் உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோரம்’ என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் செய்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்தவர்களை தவிர, சம்பந்தமில்லாத சில வெளியாட்கள் வேனில் வந்ததாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை வெளியே அனுப்பும்படி போலீசாரிடம் பொதுமக்கள் கூறினார்கள்.

இதைதொடர்ந்து அந்த ஊருக்கு சம்பந்தம் இல்லாத வெளிநபர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி மாணவ–மாணவிகள் அங்கு வந்து, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story