டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
திருக்குவளையில் உள்ள டாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் திருக்குவளை டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுசிலா, ஒன்றிய செயலாளர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் திருக்குவளை டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும். தமிழக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாலகிருஷ்ணன், துணை மேலாளர் வேம்பு, திருக்குவளை தாசில்தார் சுதாராணி, நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருக்குவளையில் உள்ள டாஸ்மாக் கடையால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆதலால் இந்த டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து டாஸ்மாக் கடையை இன்னும் 2 மாதங்களில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் வைரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த மாலதி, விஜயலட்சுமி, சரசு, சாந்தா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story