18 கிலோ சந்தன மரக்கட்டைகள் கடத்திய 3 பேர் கைது; கார் பறிமுதல்
ராசிபுரம் அருகே 18 கிலோ சந்தன மரக்கட்டைகளை காரில் கடத்தி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி வழியாக கொல்லிமலைக்கு சந்தன மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக தனிப்படை போலீசார் முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் முள்ளுக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் சுமார் 18 கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டைகள் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர்கள் கொல்லிமலை, பெரக்கரைநாட்டை சேர்ந்த தனபால் (வயது 26), சவுந்திரராஜன் (27), சேகர் (36) என்பதும், அவர்கள் கொல்லிமலையில் சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதற்காக கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சி அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 18 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளையும், சந்தனமரக்கட்டைகள் கடத்தி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கார் மற்றும் சந்தனமரக்கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story