மாணவர் சாவுக்கு நீதிவிசாரணை கேட்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
மேல்மருவத்தூரில் கல்லூரி மாணவர் யுவராஜ் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகத்திற்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாக கூறியும் தேனியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஆலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தேசியக்குழு உறுப்பினர் சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். மாணவர் யுவராஜ் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story