பள்ளிபாளையம் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 36), இவருடைய மனைவி சரண்யா(30). கடந்த 5–ந் தேதி மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம்(34) அங்கு வந்தார்.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 36), இவருடைய மனைவி சரண்யா(30). கடந்த 5–ந் தேதி மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம்(34) அங்கு வந்தார். அவரிடம், குமரேசன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது செலவு செய்த பணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றியதில் கைகலப்பாக மாறியது. இதில் சிவானந்தம் அணிந்திருந்த கைச்செயின்(பிரேஸ்லட்) அறுந்தது. உடனே கைச்செயின் அறுந்த செலவு தொகையை கேட்டு சிவானந்தம், அவருடைய நண்பர்கள் கேசவன்(30), சங்கர்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து, குமரேசனையும், அவருடைய மனைவி சரண்யாவையும் கைகளாலும், ரீப்பர் கட்டையாலும் தாக்கி விட்டு ஓடினர். இது குறித்து குமரேசன் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேசவன், சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவானந்தத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.