மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து


மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 11 July 2017 4:00 AM IST (Updated: 11 July 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உலகிலேயே விலையுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தியேட்டர், நீச்சல் குளம் உள்பட சகல வசதிகளும் காணப்படுகின்றன.

இதன் 6–வது மாடியில் முகேஷ் அம்பானி தோட்டம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், 6–வது மாடியில் இருந்து குபு குபுவென கரும்புகை வெளியேறியது. அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை. சேத விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நேற்று மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story