குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று போலீஸ் துணை கமிஷனர் சக்தி கணேசன் கூறினார்.
திருச்சி,
திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனராக(சட்டம் ஒழுங்கு) இருந்த மயில்வாகனன் சில நாட்களுக்கு முன்பு மதுரை போலீஸ் துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனராக சக்தி கணேசன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தனது அறையில் பொறுப்பேற்று கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவுகள் மற்றும் குற்ற செயல் களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் முறைப்படி வழக்கு போட்டு உரிய விசாரணை நடத்தப் படும். சாலை விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி கொண்டு, அவர் களுடன் நேரடி தொடர்பில் இருப்பேன்” என்று கூறினார்.
போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேசன் 2015-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பயிற்சி பெற்றார். அங்கிருந்து அரக்கோணம், கமுதி ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அவர், நேற்று திருச்சி மாநகரத்தில் துணை கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார் என்பது குறிப் பிடத்தக்கது.

Related Tags :
Next Story