நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி 3 பேர் கைது


நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2017 3:30 AM IST (Updated: 12 July 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(வயது 45), முருகேசன்(38). இவர்கள் 2 பேரும் நிர்வாக இயக்குனர்களாக இருந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூனங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் இயக்குனராக இருந்தார். இவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பணம் வசூலித்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் டெபாசிட் பணத்தை பொதுமக்களுக்கு திரும்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பவர் இந்த நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 900 டெபாசிட் செய்துள்ளார். பலமுறை நேரில் சென்று தன் டெபாசிட் பணத்தை திருப்பி தர கேட்டும் கொடுக்கவில்லை. இதுபற்றி காளிமுத்து விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரில், 2 ஆயிரம் பேர் ரூ.8 கோடி வரை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இவர்கள் யாருக்கும் பணம் திரும்பி தரப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன், முருகேசன், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story