கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கதிராமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற கல்லூரி பொறுப்பாளர்கள் மணிகண்டன், லோகேஷ் தலைமை தாங்கினர். கோரிக்கையினை விளக்கி மாணவர் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், வீரபாண்டியன் ஆகியோர் பேசினர். இதில் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பிரகாஷ், மோகன்ராஜ், முகமதுபைசல், மணிராகவன், வேலுமணி, கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 More update

Next Story