நீட் தேர்வு விலக்கிற்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு விலக்கிற்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வலியுறுத்தி ஜன நாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கராசு தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் ராசேந்திரன், தி.மு.க. மாநகர செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மனோ கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார்.
திராவிடர் கழக தலைமை பேச்சாளர் பூவை.புலிகேசி, பொதுச் செயலாளர் ஜெயக் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நீட் தேர்வில் தமிழகத்தில் 38.83 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இடஒதுக்கீடு இல்லாத உயர் சாதியினருக்கு 50.5 சதவீத இடங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி இருப்பது சட்டத்தை மீறிய செயலாகும். நீட்தேர்விலும் தகுதியை தேர்வு செய்ய ஒரே மாதிரியான அளவுகோலை மேற்கொள்ளாமல் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கேள்வி தாளை கொடுத்து தேர்வு எழுத செய்தது பெருங்குற்றமாகும். எனவே நடத்தப்பட்ட நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகஅரசின் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே கிடைத்திடும் வகையில் தமிழகஅரசு சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்ட சபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை மத்திய, மாநில அரசுகள் பெற்று தர வேண்டும்.
மாநில அரசுகள் அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப 50 சதவீதத்திற்கு குறைவில்லாமல் அரசு மருத்துவர்களுக்கே உயர்நிலை சிறப்பு மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டை வழங்கி கொள்ளலாம் என்ற வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளில் அவசர சட்டம் மூலம் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாதுஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹமீது, தி.மு.க. மாநில மகளிரணி துணைச் செயலாளர் காரல்மார்க்ஸ், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன், திராவிடர் கழக மண்டல தலைவர் ஜெயராமன், மண்டல செயலாளர் அய்யனார், மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாநில பொதுச் செயலாளர் அழகிரிசாமி மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டனர்.
முடிவில் திராவிடர் கழக மாநகர தலைவர் நரேந்திரன் நன்றி கூறினார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு தபால் அட்டையும், மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது.

Related Tags :
Next Story