‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வில் தமிழகத் திற்கு விலக்கு அளிக்கக்கோரி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீட் தேர்வினால் தமிழக மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன் உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் துரைசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் செய்திருந்தனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற குடியரசுத்தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்று பேசினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், காங்கிரஸ் நகர தலைவர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிற்றம்பலம் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story