1 ரூபாய் ‘கிளினிக்’குகள் இந்த மாத இறுதியில் திறக்க முடிவு


1 ரூபாய் ‘கிளினிக்’குகள் இந்த மாத இறுதியில் திறக்க முடிவு
x
தினத்தந்தி 13 July 2017 4:37 AM IST (Updated: 13 July 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

வாஷி, பன்வெல் ரெயில் நிலையங்களிலும் 1 ரூபாய் ‘கிளினிக்’குகளை இந்த மாத இறுதியில் திறக்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

மும்பை

மும்பையில் ரெயில் விபத்துகளினால் உண்டாகும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக மும்பை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மத்திய ரெயில்வே தனது வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் 1 ரூபாய் ‘கிளினிக்’குகள் எனப்படும் அவசர சிகிச்சை அறைகளை திறந்து வருகிறது.

இதன்படி மத்திய ரெயில்வே ‘மேஜிக்ஹார்ட்’ என்ற தனியார் சுகாதார நிறுவனத்துடன் இணைந்து முதல்கட்டமாக தனது மெயின் வழித்தடத்தில் தாதர், குர்லா, காட்கோபர், முல்லுண்டு ஆகிய ரெயில் நிலையங்களிலும், துறைமுக வழித்தடத்தில் வடலா ரெயில் நிலையத்திலும் 1 ரூபாய் ‘கிளினிக்’குகளை திறந்தது.

அவற்றை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு முறைப்படி திறந்து வைத்தார். இந்த ‘கிளினிக்’குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதையடுத்து மும்பை மெட்ரோ ரெயில் நிர்வாகமும் 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 1 ரூபாய் ‘கிளினிக்’குகளை திறக்க முடிவு செய்து உள்ளது.

இந்தநிலையில், மத்திய ரெயில்வே துறைமுக வழித்தடத்தில் உள்ள பிரதான ரெயில் நிலையங்களான வாஷி மற்றும் பன்வெல் ஆகிய இரண்டு ரெயில் நிலையங்களில் 1 ரூபாய் ‘கிளினிக்’குகளை இந்த மாத இறுதியில் திறப்பதற்கு முடிவு செய்து உள்ளது.


Next Story