முதியோர் உதவித் தொகை வழங்கக்கோரி அதிகாரிகள் முற்றுகை
முகாம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமுக்கு அணைக்கட்டு தாசில்தார் மதிவாணன் தலைமை தாங்கினார்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு ஒன்றியம் கீழ்கொத்தூர் ஊராட்சியில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமுக்கு அணைக்கட்டு தாசில்தார் மதிவாணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் கோட்டீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலிங்கம் வரவேற்றார். முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக தனி துணை கலெக்டர் பூங்கொடி, ஆதிதிராவிடர் நல அலுவலர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு, 37 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னதாக அதிகாரிகள் முகாமுக்கு வந்தபோது, அப்பகுதியை சேர்ந்த முதியோர்கள் உதவித்தொகை வழங்கக்கோரி 6 மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்தும் இதுவரையில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து விசாரித்து எங்களுக்கு இந்த மனுநீதி நாள் முகாமில் ஓய்வூதியம் வழங்குவதற்கான அத்தாட்சி சான்றிதழ் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டனர்.
இதனையடுத்து தனி துணை கலெக்டர் பூங்கொடி, முதியவர்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். அப்போது அனைத்து மனுக்களும் தகுதியில்லாதது என தெரியவந்தது.