டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்


டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 July 2017 4:15 AM IST (Updated: 14 July 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ளது தறிகொம்பன் கிராமம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக கிராமப்புறங்களில் கடைகள் திறக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதேபோல் இளையான்குடி-சாலைகிராமம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால் இதற்கு பதிலாக தறிகொம்பன் கிராமத்தில் உள்ள தனியார் இடத்தில் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடை கட்டுவதற்கான கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த தறிகொம்பன், கோட்டையூர், புலியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று தறிகொம்பன் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலைகிராமம்-இளையான்குடி சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் கோட்டையூர், புலியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் பாலாஜி, டாஸ்மாக் அதிகாரி அசோக்குமார், இளையான்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story