மனுநீதி நாள் முகாமில் ரூ.53¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


மனுநீதி நாள் முகாமில் ரூ.53¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 July 2017 10:30 PM GMT (Updated: 13 July 2017 10:13 PM GMT)

மனுநீதி நாள் முகாமில் ரூ.53¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிழக்கு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. பரசுராமன் எம்.பி. முன்னிலை வகித்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 271 பயனாளிகளுக்கு ரூ.53 லட்சத்து 26 ஆயிரத்து 230 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 140 மனுக்களில் 13 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், கால்நடை துறை இணை இயக்குனர் மாசிலாமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குருசேவ், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிரவன், ஒரத்தநாடு தாசில்தார் ஜானகிராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story