டாஸ்மாக் கடையை எதிர்த்து 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் 15 பேர் கைது
இரணியல் கோணத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகியமண்டபம்,
இரணியல்-தக்கலை சாலையில் இரணியல் கோணத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் இரணியல் கோணம், கண்ணாட்டுவிளை போன்ற பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கடை முன்பு குவிந்தனர்.
அவர்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இரவு 10 மணி வரை நடந் தது. மேலும், கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக சென்று சிலரை கைது செய்தனர்.
இதில், இரணியல் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், அருள்ராஜ் மற்றும் 5 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் இரணியல்கோணம் சந்திப்பில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். அவர்கள் போலீசார் கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், இரணியல்-தக்கலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின. இதையடுத்து குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கைது செய்தவர்களை விடுதலை செய்வதாக போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையோரம் கடை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதியம் 1 மணியளவில் கைது செய்யப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களும் போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நேற்று இரவிலும் போராட்டம் நீடித்தது.

Related Tags :
Next Story