ஆசிரியர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை


ஆசிரியர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 July 2017 3:45 AM IST (Updated: 14 July 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே ஆசிரியர் வீட்டில் 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி கூட்டு ரோட்டில் வி.ஐ.பி. நகர் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 43). இவர் ஓசூரில் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மெல்பா (38). இவர் கெலமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு ஸ்டெய்ன் (13) என்ற மகனும், ஸ்டீனா (8) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ஸ்டீபனும், மெல்பாவும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர். அதே போல குழந்தைகள் 2 பேரும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் பள்ளி முடிந்து மாலை ஸ்டீபன் வீட்டிற்கு திரும்பினார். அப்போ வீட்டின் கதவு திறந்து இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.1,000 கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மத்திகிரி போலீசில் ஸ்டீபன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Tags :
Next Story