குன்னம் அருகே மின்கசிவால் தீ விபத்து குடிசை எரிந்து சாம்பல்
குன்னம் அருகே மின்கசிவால் தீ விபத்து குடிசை எரிந்து சாம்பல்; காளை மாடு–கன்று குட்டிகள் செத்தன
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர், பூச்சி மருந்து வியாபாரம் செய்து வருகிறார். தற்போது புதிதாக அந்தூர் கிராமத்தில் முருகன் வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் பின்புறம் ஏற்கனவே இருந்த பழைய குடிசை வீட்டின் ஒரு புறம் தங்கி முருகன் குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். மற்றொருபுறம் மாடுகளை கட்டி வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது மின்கசிவு ஏற்பட்டதில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு கட்டி போடப்பட்டிருந்த காளை மாடும், 2 கன்று குட்டிகளும் தீயில் கருகி செத்தன. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story