முன்னாள் படைவீரர்களின் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் அறிவுறுத்தல்
முன்னாள் படைவீரர்களின் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
தூத்துக்குடி,
முன்னாள் படைவீரர்களின் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
குறைதீர்க்கும் நாள்தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது:–
நடவடிக்கைதூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வித்துறையில் இட ஒதுக்கீடு, இலவச வீட்டுமனை பட்டா, சுயதொழில் கடன், விலையில்லா வீடுகள், பட்டா பெயர் மாற்றம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 40 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெறப்பட்ட மனுக்கள் மீதும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு முன்பாக கோரிக்கை மனுக்கள் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.