டோம்பிவிலியில் மின்சாரம் பாய்ச்சி எலக்ட்ரீசியன் கொலை கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்
டோம்பிவிலியில் கை, கால்களை கட்டிப்போட்டு உடலில் மின்சாரத்தை பாய்ச்சி எலக்ட்ரீசியன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தானே,
டோம்பிவிலியில் கை, கால்களை கட்டிப்போட்டு உடலில் மின்சாரத்தை பாய்ச்சி எலக்ட்ரீசியன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாற்காலியில் பிணம்தானே டோம்பிவிலி பகுதியில் வசித்து வந்தவர் மனோகர்(வயது24). இவர் டோம்பிவிலி, கோனிகாவ் பகுதியில் உள்ள மின் பணிமனையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருடன் மேலும் சிலர் வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலை ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தார். அப்போது பணிமனைக்குள் இருந்த நாற்காலியில் மனோகர் பிணமாக கிடந்தார். மேலும் அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. இது குறித்து அவர் உடனடியாக மான்பாடா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
மின்சாரம் பாய்ச்சி கொலைதகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மனோகருடன் பணிபுரியும் சிலர் அவரை நாற்காலியில் கட்டிப்போட்டு மின்வயரை அவர் மீது போட்டு மின்சாரத்தை உடலில் பாய்ச்சி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.