பண்ருட்டி அருகே நர்சை கொன்று புதைத்த வழக்கு: தோழியின் காதலன் கைது
பண்ருட்டி அருகே நர்சை கொன்று உடலை ஆற்றில் புதைத்த வழக்கில் தோழியின் காதலன் கைதானார்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் திவ்யா(வயது 19). நர்சிங் படித்து முடித்த இவர், தனியார் மருத்துவமனையில் தற்காலிகமாக வேலை செய்து வந்தார்.
பின்னர், அந்த வேலையைவிட்டு சாத்தமாம்பட்டில் உள்ள தனது சித்தி ஜெகதீஸ்வரி என்பவருடன் வசித்து வந்தார். இவரது தோழி கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்த என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியான ஜெகநாதன் மகள் சித்ரா(19) ஆவார். இருவரும் நர்சிங் கல்லூரியில் படித்தபோதே பழகி வந்தனர்.
சித்ராவுக்கு, திருவாமூரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சித்ராவின் ஆண் நண்பர் ஆனத்தூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் விஜயராஜ்(22) என்பவருடன் திவ்யா நெருங்கி பழகினார். இதனால் ஆத்திரமடைந்த சித்ரா, தனது தோழியை கண்டித்தார். அவர் கேட்காததால், தோழியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதற்காக தனது காதலன் மோகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். தங்களது திட்டப்படி கடந்த மே மாதம் 8-ந்தேதி இரவு திருவாமூர் கெடிலம் ஆற்றில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து திவ்யாவை கொன்றனர். பின்னர் அவரது உடலை ஆற்றிலேயே குழிதோண்டி புதைத்து விட்டு இருவரும் சென்று விட்டனர்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவை நேற்று முன்தினம் மடக்கி பிடித்தனர். அப்போது அவர் திவ்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
மேலும் திவ்யா பயன்படுத்திய பை, செல்போன் ஆகியவற்றை கீழ்காங்கேயன்குப்பத்தில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதைத்ததாக கூறியதால் சித்ராவை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அப்போது, போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய சித்ரா அங்குள்ள 150 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் குதித்தார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால், படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து சித்ராவின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையே திவ்யாவை கொலை செய்வதற்கு சித்ராவுக்கு உறுதுணையாக இருந்த மோகன், சித்ரா போலீஸ் பிடியில் சிக்கியவுடன் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அவரை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் ஒரு தனிப்படையும், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் ஒரு தனிப்படையும், சைபர் கிரைம் போலீசாரை கொண்ட ஒரு தனிப்படையும் என 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மோகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பண்ருட்டி ரெயில்வே கேட் அருகில் மோகன் நிற்பதாக நேற்று இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து காடாம்புலியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முருகேசன் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து சென்று மோகனை கைது செய்தனர். பின்னர், அவரை காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
திய்வாவை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திவ்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோகனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். பஸ்சில் வந்து செல்லும்போது கண்டக்டரான அவருக்கும் சித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் பண்ருட்டி மணிநகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது சித்ரா அவரது தோழியான திவ்யாவை மோகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஏற்கனவே சித்ராவுக்கும், ஆனத்தூரை சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அவருக்கும் திவ்யாவை, சித்ரா அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையே விஜயராஜ் திடீரென வெளிநாடு சென்று விட்டார். அதன் பின்னர் சித்ராவை திருமணம் செய்யாமல் மோகன் குடும்பம் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்த விஜயராஜிக்கு இந்த விவகாரம் தெரியவந்ததும் அவர் சித்ராவின் தோழி திவ்யாவுடன் பழக ஆரம்பித்தார்.
இதை அறிந்த சித்ரா, விஜயராஜியுடன் பழக கூடாது என திவ்யாவை கண்டித் தார். ஆனால் அதை கண்டுகொள்ளாத திவ்யா விஜயராஜியுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்ரா, திவ்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதுபற்றி மோகனிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8-5-2017 அன்று திவ்யாவை பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் காமாட்சி பேட்டை கெடிலம் ஆற்றின் மையபகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர். பின்னர், மயங்கி விழுந்த திவ்யா உயிருக்குபோராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த சித்ராவும், மோகனும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று உடலை அங்கேயே புதைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் நாங்கள் நடத்திய விசாரணையில் சித்ராவின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அவர் மூலம் இந்த கொலையில் கண்டக்டர் மோகனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை பிடிக்க வலைவீசி தேடி வந்தோம். சித்ராவை கைது செய்ததை அறிந்த மோகன் போலீசுக்கு பயந்து திருவாமூர் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்தார். போலீசார் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அவர் வெளியூர் தப்பி செல்ல முடிவு செய்து பண்ருட்டி ரெயில்வே கேட் அருகில் வந்து கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தும் நாங்கள் உடனே விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story