4 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
கோட்டூர் பகுதியில் விடுபட்ட 4 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் நிர்மல்ராஜிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்திற்கு கடந்த 2016-17-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கோட்டூர், ரெங்கநாதபுரம், குன்னியூர், செருகளத்தூர் ஆகிய 4 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நேற்றுமுன்தினம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து சென்று மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகவேலு, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஜீவானந்தம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலெக்டர் நிர்மல்ராஜை நேரில் சந்தித்து விடுபட்ட 4 கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Related Tags :
Next Story