பிடித்தம் செய்யப்பட்ட சரக்கு, சேவை வரியை வழங்காவிட்டால் கட்டுமான பணிகளை நிறுத்தும் போராட்டம்


பிடித்தம் செய்யப்பட்ட சரக்கு, சேவை வரியை வழங்காவிட்டால் கட்டுமான பணிகளை நிறுத்தும் போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2017 10:45 PM GMT (Updated: 26 July 2017 9:07 PM GMT)

பிடித்தம் செய்யப்பட்ட சரக்கு, சேவை வரியை வழங்காவிட்டால் கட்டுமான பணிகளை நிறுத்தும் போராட்டம் ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி,

தென்னக ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. சங்க தலைவர் ஜோசப் லூயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயலாளர் முத்துராமன், ஆடிட்டர் அழகப்பன் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த தேதிக்கு முன்பாக ஒப்பந்தம் போடப்பட்டு தற்போது கட்டுமான நிலையில் உள்ள ஏராளமான பணிகளுக்கும், டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கும் ரெயில்வே நிர்வாகம் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியை பிடித்தம் செய்து உள்ளது. இந்த வரியை ரெயில்வே நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் ரெயில்வே நிர்வாகம் திரும்ப வழங்கவில்லை என்றால் 16-ந்தேதி முதல் ரெயில்வே தொடர்பான அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைத்து போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Related Tags :
Next Story