காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்


காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:00 AM IST (Updated: 31 July 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பாபநாசத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

பாபநாசம்,

பா.ம.க. சார்பில் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணம் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கடந்த 28–ந் தேதி தொடங்கியது. தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு நேற்று முன்தினம் இந்த பிரசார பயண குழுவினர் வந்தனர். இதை தொடர்ந்து பாபநாசம் மேலவீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர், மாவட்ட தலைவர் தனவந்தராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்பேத்தி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரியின் பெருமைகள், பிரச்சினைகள், தீர்வுகள் ஆகியவற்றை மக்களுக்கு விளக்கி கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளேன். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். என்னுடன் இணைந்து அனைவரும் காவிரியை பாதுகாக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவீந்திரன், பாபநாசம் நகர தலைவர் கஜேந்திரன், நகர செயலாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் ராம்குமார், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story