ராமேசுவரம்–பைசாபாத் ரெயில் ராமநாதபுரத்தில் நின்று செல்ல வேண்டும் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை


ராமேசுவரம்–பைசாபாத் ரெயில் ராமநாதபுரத்தில் நின்று செல்ல வேண்டும் தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:30 AM IST (Updated: 31 July 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து பைசாபாத் செல்லம் ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகர் மாவட்ட தலைநகர் மட்டுமின்றி வளர்ந்து வரும் நகரமாகும். ராமநாதபுரத்தை சுற்றிலும் பல முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன. குறிப்பாக திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ஏர்வாடி, தேவிபட்டினம் போன்ற இடங்களுக்கு தினமும் வடமாநில பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள ராமேசுவரம்–பைசாபாத் ரெயில் ராமநாதபுரத்தில் நிற்காமல் செல்கிறது.

இந்த ரெயிலில் பயணம் செய்யவேண்டுமென்றால் 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேசுவரத்துக்கோ, அல்லது 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரைக்கோ தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். எனவே பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ஏதுவாக கால அட்டவணையை மாற்றி அமைத்து உத்தரவிடவேண்டும்.

மேலும் ராமேசுவரம்–சென்னை இடையே இருவழிகளிலும் அதிவிரைவு பகல் நேர ரெயில் விட வேண்டும் என இப்பகுதி மக்களும், வர்த்தக சங்க அமைப்புகளும் வைத்த கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. பாம்பன் ரெயில் மேம்பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த ரெயிலின் அவசிய தேவை குறித்து எடுத்துக்கூறி வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி இந்த ரெயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட வேண்டும் என்று தெரிவித்தார்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி பகல் நேர விரைவு ரெயில் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


Next Story