புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு
சமத்துவபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் மங்கள்ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கும் வசிக்கும் இடத்துக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. இதனால் எங்கள் பகுதியில் இருந்து வேலைக்கு சென்று வரும் சில பெண்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சாதி மோதல்கள், குற்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை சேர்ந்த ராஜா மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு விதிகளை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ் மற்றும் புதூர் யூனியன் சின்னூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், சின்னூர் கிராமத்தில் உள்ள கண்மாயின் மதகுகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் கண்மாய்க்கு வரும் நீரை சேமிக்க முடியவில்லை. எனவே யூனியன் பொது நிதியில் இருந்து பழுதடைந்த மதகுகளுக்கு பதிலாக புதிய மதகுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், பெரிய வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வீடுகளில் மாநகராட்சி அனுமதி பெறாத குடிநீர் குழாய்களை கண்டறிந்து அந்த இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அதேபோன்று கோவில்பட்டி, காயல்பட்டினம் நகரசபை பகுதிகளிலும் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சாமிநகர் பகுதி பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாமிநகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் குழந்தைகளை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எங்கள் பகுதிக்கு விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சிங் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியானது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாகும். அங்குள்ள மக்கள் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளனர். மேல் படிப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே அந்த பகுதி மக்கள் கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களின் நலன் கருதி, ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story